கடலூர், ஆக. 2- கடலூர் அருகே மீனவர் கிராமத்தில் இருதரப்பு மோதல் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக பாது காப்பு பணியில் காவல்துறை யின் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தாழங்குடா கிரா மத்தைச் சேர்ந்தவர் மதி வாணன் (30). மீனவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி தேர்தல் முன்விரோதம் கார ணமாக கொலை செய்யப் பட்டார். இதைதொடர்ந்து அப்பகுதியில் இருதரப்பினரி டையே தொடர்ந்து முன்விரோ தம் நிலவிவருகிறது. தொடர் மோதல் மற்றும் படகுகளுக்கு தீவைப்பு உள்ளிட்ட சம்பங்களை அடுத்து சம்பந்தப்பட்ட கிராம பகுதிகளில் காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இந் நிலையில் மதிவாணன் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தாழங்குடா பகு தியைச் சேர்ந்த மீனவர்கள் ஞாயிறன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மதிவாணன் கொலை செய்யப்பட்ட இடத் தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதை யடுத்து வழக்கத்தைவிட போலீசார் கூடுதலாக தாழங்குடா கடற்கரை கிராம பகுதியில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கிராமத்திற்குள் வெளி நபர்கள் யாரும் சம்பந்த மில்லாமல் அனுப்பப்பட வில்லை. மேலும் அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்க ளும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் மட்டுமே அனுமதிக் கப்பட்டனர்.