districts

img

சென்னையில் பிரமாண்ட நடைபயிற்சி பாதை-மூலிகை பூங்கா

சென்னை, ஜூலை 13-  சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளுடன் கூடிய பிரமாண்ட நடை பயிற்சி பாதை, மூலிகை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 1 கிலோ மீட்டர்  நீளத்துக்கு நடை பயிற்சி பாதைகள், சிறுவர்களுக்காக உடற்பயிற்சி கூடம், அடர்வனம் (மியாவாக்கி) பூங்கா, தியானமண்டபம் நுழைவு பிளாசா, மூலிகை காடுகள், பெண்கள் உடற் பயிற்சி மையம், கூழாங்கல் நடை பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.  இதில் பசுமை பூங்கா 1550 ச.மீ., யோகா கூடம் 1250 ச.மீ, திறந்த ஜிம்-800 ச.மீ, பார்க்கிங் 400 ச.மீட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் வேம்பு, புங்கை, மருது,  மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம், செண்பகம், மகிழம், உள்பட  1000- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மேலும், சிறுவர் விளையாட்டுதிடல், தியானமண்டபம், திறந்தவெளி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கான உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.