districts

img

தலைவர்கள் சிலை வைப்பதில் போட்டா போட்டி

விழுப்புரம்,டிச.9- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் காந்தி, அண்ணாதுரை மற்றும் அம்பேத்கர் சிலைகள் இருந்தது. விழுப்புரம்–-நாகப் பட்டினம் நெடுஞ்சாலை பணி நடைபெறுவதால் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடந்தது. புதிதாக கட்டப்பட்ட பீடத்தில் 3 சிலை களும் வைக்கும் பணி நடந்தது.  இந்த நிலையில், பாஜகவினர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க இடம் பிடித்து தங்கள் கட்சிக்கொடியை நட்டு வைத்தனர். அதேபோல், பாமகவினர் குருவுக்கு சிலை வைக்க இடம் பிடித்தனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் சிலை அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். திமுவினரும் இடம் கோரியதால் பாஜக,பாமகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு காவ லர்கள் குவிக்கப்பட்டனர். பிறகு வட்டாட்சியர் தலைமை யில் அமைதி பேச்சு நடைபெற்றது.