districts

பெத்தேல்நகர் வழக்கு: அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 8 - பெத்தேல் நகர் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு ஆஜராவதில் இருந்து சம்பந்தபட்ட அதி காரிகளுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம், பெத் தேல் நகரில் உள்ள குடியிருப்பு உள்ளிட்ட கட்டி டங்களை அகற்றாதது தொட ர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை மற்றும் குடியிருப்போர் தொடர்ந்த வழக்குககள் ஆகியவை பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்க ளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரி வித்த நீதிபதிகள், மாணவர்க ளின் படிப்பு, தேர்வுகளை கருத்தில் கொண்டு குடியி ருப்பு கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டிக்க கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் அளித்துள்ளனர். அதேசமயம், ஆக்கிரமிப் பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான அரசு கொள்கை முடிவு எடுத் துள்ளதாகவும், அங்கு வசிப் பவர்களின் விவரங்கள், நிலத்தின் தன்மை குறித்த விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழங்க பெத்தேல் நகர்  மக்களுக்கு உத்தரவிட்டி ருந்தனர். இந்த வழக்குகள் செவ் வாயன்று (பிப்.8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெத்தேல் நகரில் வசிப்போரின் பெயர், நிலத்தின் பரப்பு, சர்வே எண், எவ்வளவு காலமாக வாழ்கி றார்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற விவர ங்களை பெத்தேல் நகர் பாது காப்பு பேரவை கொடுத்துள் ்ளதாக அரசு தரப்பில் தெரிவி க்கப்பட்டது.

அவற்றை தொகுத்து அட்டவணை யாக்கி நேரடி ஆக்கிரமிப் ்பாளரா அல்லது பிறரிடம் வாங்கியவர்களா என்ற விவர ங்களுடன் தாக்கல் செய்ய அரசு தலைமை வழக்கறி ஞரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில், வணிக  நிறுவனங்கள் மின்  இணைப்பு துண்டிக்கப்பட்டா லும், அந்த கட்டிடங்கள் குடி யிருப்புடன் இணை திருப்பதால் இடிக்க முடிய வில்லை. அதேசமயம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று அதிகாரிகள் ஆஜரா வதில் இருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர். சீல் வைக்கப்பட்ட வணிக  நிறுவனங்களில் உள்ள பொருட்களை எடுக்க அனு மதிக்க வேண்டுமென்ற உரி மையாளர்களின் கோரிக் கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி கள் ஒத்தி வைத்தனர்.