புதுச்சேரி, அக்.15- முறைச்சாரா,கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சிபிஎம் பாகூர் கொம்யூன் கமிட்டி மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி மாநாடு தோழர்கள் சீதா ராம் யெச்சூரி, த.முத்துலிங்கம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. மூத்த தோழர் பெ.கலியபெருமாள் செங்கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக பாகூர் தூக்கு பாலத்தில் இருந்து துவங்கிய பேரணியை மூத்த தோழர் எஸ்.பத்மநாபன் துவக்கி வைத்தார். போராட்டங்களின் புகைப்பட கண்காட்சியை மூத்த தோழர் கோ.ராமசாமி திறந்து வைத்தார். கலியன், முருகையன், குப்பம்மா ஆகியோர் மாநாட்டிற்கு தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ் துவக்கி வைத்தார். செயலாளர் ப.சரவணன் வேலை அறிக்கையையும், வடிவேலு வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கொம்யூன் கமிட்டி தேர்வு இம்மாநாட்டில் 7 கொண்ட பாகூர் கொம்யூன் கமிட்டி யின் செயலாளராக ப.சரவணன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் தீபாவளிக்கு முன்பாக ரேசன் கடைகளை திறக்க வேண்டும். பாகூர் உள்ளிட்ட அனைத்து கொம்யூன் தலைநகரங்களில் தீபாவளி சிறப்பு அங்காடிகளை திறந்து குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்க வேண்டும்.மின்துறையில் பிரீபெய்டு மின் மீட்டர், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது.