districts

img

ஆளுநருக்கு அனுப்பிய ஐய்யன் படம் ...

இந்திய அரசு அங்கீகரித்த அய்யன் திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல்  இந்துத்துவ அடையாளத்தோடு உள்ள திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில் திங்களன்று (ஜன.20) வியாசர்பாடி அஞ்சலகத்திலிருந்து அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை  ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.டில்லிபாபு(காங்கிரஸ்), சு.ஜீவன்(மதிமுக), இளஞ்சேகுவேரா(விசிக) சிபிஎம், சிபிஐ, இந்திய குடியரசு கட்சி, யுசிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.