சென்னை, செப்.15- அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலத்தில் பல்வேறு பிரிவுகளில் கீழ் சிறப்பாக செயல்படும் ஊழியர்களை பாராட்டும் வகையில் 2021-22ம் நிதி யாண்டுக்கான சிறப்பு விருது கள் வழங்கும் விழா புத னன்று சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் முதன்மை அஞ்சல் துறை தலை வர் செல்வகுமார் விருது களை வழங்கி பாராட்டி னார். மேலும், சென்னை நகர மண்டல அஞ்சல் சேவை இயக்குநர் சோம சுந்தரம், சென்னை நகர மண்டல தலைவர் நட ராஜன் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள், ஊழி யர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து 2021-22ம் ஆண்டில் இலக்கு சாதனை மற்றும் வரு வாய் உருவாக்கத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் கோட்டங்கள், சேமிப்பு வங்கி, சிறப்பாக செயல்படும் தலைமை அஞ்சலகங்கள், சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளை அங்கீகரிக்கும் வகையில் 75 மண்டல சிறப்பு விருது கள் வழங்கப்பட்டது. இதை யடுத்து சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள் மற்றும் அஞ்சல் அலுவல கங்களுக்கு 25 விருதுகள், ஊழியர்களுக்கு 50 விருதுகள் என மொத்தம் 75 விருதுகள் வழங்கப்பட்டன.