சென்னை, செப்.9- தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் பரப்புரையாளர் களுக்கு மாதம்தோறும் விருது வழங்கப்படும், என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மைத்துறை மூலம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் கட்டட கூட்டரங்கில் வியாழனன்று (செப்9) நடைபெற்றது. இதில், ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள், உயிரி எரிவாயு மையங்கள் மற்றும் தோட்டக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனி யாக பிரித்தெடுக்கும் வள மற்றும் பொருட்கள் மீட்டெடுக்கும் மையங்கள் மற்றும் பிளாஸ்டிக், உலோக பொருட்களை தனியாக பிரித்து மறுசுழற்சியாளர்களுக்கு வழங்குதல் போன்றவற்றின் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறு குப்பைகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் குப்பைக் கிடங்கிற்கு நாள்தோறும் அனுப்பப்படும் குப்பையின் அளவு குறையும். இதன் மூலம் மாநகராட்சி யின் சுகாதாரம் மேம்படும். எனவே, பொதுமக்களிடமிருந்து குப்பை களை வாங்கும் போது அவற்றை தரம் பிரித்து வழங்க பரப்புரையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்த எடுத்துக்காட்டுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சிறப்பாக பணிபுரியும் பரப்புரையாளர்களுக்கு மாதம்தோறும் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.