districts

img

படாளம் சர்க்கரை ஆலையில் மின்சாரம் உற்பத்தி செய்திடுக விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

மதுராந்தகம், ஜூலை 11 – படாளத்தில் இயங்கிவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநாடு  வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 30 வது  மாநாடு மதுராந்தகத்தில் தோழர் நாகேஷ் நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர்  எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மதுராந்த்தம் வட்டத்  தலைவர் எம்.ஜெகன்நாதன் ஏற்றிவைத்தார், வரவேற்பு குழு செயலாளர் எம்.எஸ்.அர்ஜூன்குமார் வரவேற்றார், மாவட்ட துணைத் தலைவர் எம்.அழகேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயலாளர் ஸ்டா லின் மணி பேசினார். சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜி.மோகனன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ஜி.மாரி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.  மாநாட்டை வாழ்த்தி விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலா ளர் கே.நேரு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.சண்மு கம், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத் திரி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலாமணி ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில  செயலாளர் துளசி நாராயணன் பேசினார். எ.செல்வராஜ் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், நீர் பிடிப்பு, நீர்வரத்து கால்வாய்களை தூர்வார  வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல்களை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம்  வழங்குவதுடன், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை  உடனடியாக வழங்கிட வேண்டும்கடுமை யான தீவன விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் பயனடை யும் வகையில் பால் விலையை உயர்த்தி  வழங்க வேண்டும். பாலாற்று தடுப்பணையி லிருந்து அருகில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய்களை  அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர் மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக வி.அரி கிருஷ்ணன், செயலாளர் கே.வாசுதேவன், பொருளாளர் டி.விஜயகாந்த், துணைத் தலைவர்களாக ஜி.மோகனன், எச்.முருகேசன், எம்.அழகேசன், துணை செயலா ளர்களாக எம்.அர்ஜூன்குமார், ஜி.ராஜேந்தி ரன், ஜி.மாரி ஆகியோர் உள்ளடக்கிய 23 போர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.