districts

மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலையிலும் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, மே 4- நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் தமது துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு,“இந்துசமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நில விவரங்கள் வருவாய்த்துறையின் ‘தமிழ்நிலம்’ வலைதளத்தில் பதி வேற்றப்பட் டுள்ள பதிவுகளோடு ஒப்பிடுதல் மற்றும் சரிபார்த்தல் பணி யானது தற்போதுசார்நிலை அலு வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில், 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் வரு வாய்த்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் இனங்கள் என உறுதி செய்யப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரால் கடந்த 6.9.2021 என்று இத்துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளி யிடப்பட்டுள்ளது” என்றார். இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான 22,600 கட்டடங்களும், 33,665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் 1,23,729 நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட் டுள்ளன.

கடந்த 1.7.2021 முதல் 31.3.2022 வரையிலான காலத்திற்கு மட்டும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான மேற்கண்ட அசையாச் சொத்துக்களிலிருந்து ரூபாய் 151.65 கோடி குத்தகை வருமானம் ஈட்டப் பெற்றுள்ளது என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த விவாதங்களுக்கு பிறகு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  நாள் முழுவதும் அன்னதான் வழங்கும் திட்டம் தற்போது ஐந்து கோவில்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு இரா மேஸ்வரம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர், மதுரை மீனாட்சி ஆகிய கோவில்களிலம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், 10 கோவில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும். 14 கோவில்களில் ரூ.11 கோடியில் அன்னதாக கூடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்தின்போது வருகை தரும் பக்தர்களுக்கு வழித் தடங்க ளில் 20 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். அதிக பக்தர்கள் வருகை தரும் மேலும் 5 கோவில்களுக்கு மருத்து மையங்கள் ஏற்படுத்தப்படும். ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை1செய்யும் அர்ச்சர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகப் படுத்தப்படும். இதற்கான அர்ச்சனைக் கட்டணத்தில் 60 விழுக்காடு அர்ச்சகருக்கு பங்குத் தொகை வழங்கப்படும். கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் கட்டணம் ஏதுமின்றி, கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றியும் திருமணம் நடத்த அனுமதிக்கப்படும். ஒருகால பூசை திட்டத்தின் கீழ் நிதிவசதியற்ற கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மேலும் 2 ஆயிரம் கோவில்களுக்கு விரிவுப் படுத்தப்படும். மேலும், ஒரு கால பூசை திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோவில்களின் மின் கட்டணத்தை செலுத்த மைய நிதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.