districts

img

விமான நிலையம், தி.நகரில் ப்ரீபெய்ட் ஆட்டோ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, மே 15 - சென்னை விமான நிலையம், தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ப்ரீபெய்ட் ஆட்டோ திட்டத்தை தொடங்க வேண்டும்  என்று ஓட்டு நர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத் தின்  தென்சென்னை மாவட்ட 16வது  மாநாடு ஞாயிறன்று (மே 15) கிண்டி யில் நடைபெற்றது. சென்னை நகரில் பொதுப்போக்கு வரத்து கட்டமைப்பு வலுவாக உள்ளது. அதேநேரம் ஆட்டோ ஒட்டு நர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க அரசு பொது மருத்துவ மனை, வணிக வளாகங்கள், திரை யரங்குகளில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். ஓலா, உபேர் போன்றவற்றிற்கு மாற்றாக அரசே ஆட்டோ ஆப்பை  தொடங்கி நடத்த வேண்டும். பயணி களை விமான நிலையத்திற்குள் சென்று இறக்கிவிட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறுகுற்றங்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை பறிக்கக் கூடாது. அரசு அறிவித்தவாறு இலவச ஜிபிஎஸ் மீட்டரை பொறுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாய், அடுத் தடுத்த ஒவ்வொரு கிலொ மீட்டருக் கும் 25 ரூபாய், காத்திருப்பு கட்டண மாக நிமிடத்திற்கு 1 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நலவாரியம் 4 லட்சம் ரூபாய்  கடன் வழங்க வேண்டும். ஓய்வூதி யத்தை 5 ஆயிரம் ரூபாயாக அதிக ரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனிபா தலைமை  தாங்கினார். ஆலந்தூர் பகுதி பொரு ளாளர் ஜி.சந்திரசேகர் கொடி யேற்றினார். மாவட்ட துணைப் பொதுச் செயலாளர்களில் என்.பாபு வரவேற்க, சி.வெள்ளைக்கண்ணு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு தென் சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன் பேசினார். வேலை அறிக்கையை சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் இ.உமா பதியும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஏ.பக்கிரியும் சமர்ப் பித்தனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.குமார், செயல் தலைவர் எஸ். பாலசுப் பிரமணியம், சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பா. அன்பழகன், சம்மேளன பொதுச்  செயலாளர் எம். சிவாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் எல். துர்கைபிரசாத் நன்றி கூறினார்.

நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக ப.அன்ப ழகன், செயலாளராக ஜெ.முகமது அனிபா, பொதுச் செயலாளராக இ.உமாபதி, பொருளாளராக ஏ.பக்கிரி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.