districts

img

பாலியல் வன்முறைக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 16 - பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்  கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சா ரத்தை அரசு நடத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். 76வது சுதந்திர தினத்தை யொட்டி திங்களன்று (ஆக.15) தரமணியில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் நடை பெற்ற இந்நிகழ்வை வேளச்சேரி பலர் பூங்கா நடத்தியது. இந்நிகழ்வில் கலந்து  கொண்டு ஜி.ராமகிருணஷ் ணன் பேசுகையில், குழந்தை களுக்கு எதிரான குற்றங் கள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 250  விழுக்காடு அதிகரித்துள் ளது. இத்தகைய குற்றங்கள்  மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசே  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் குறிப் பிடுகையில், வன்முறை, தீண்டலால் பாதிக்கப்பட்ட குழந்தை பேசும்போது, குற்றவாளிகளாக அணுக கூடாது. வார்த்தைகளால் காயப்படுத்தக் கூடாது.  அனைத்து பிரச்சனைக ளையும் குழந்தைகள் விவாதிக்கும் வகையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். குழந்தைகளின் உளவியல் மாற்றத்தை கண்டு பெற்றோர்கள் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.” என்றார். “குட் டச், ஃபேட் டச்  என்பதற்கு மாறாக குழந்தை களுக்கு நோ டச் கற்றுத்தர வேண்டும். தோல்வியுறும் குழந்தைகளுக்கு தன்னம் பிக்கையை கற்றுக் கொடுத் தால், வெற்றியை எளிதாக பெற்றுவிடுவார்கள் ” என்று மருத்துவர் ஷர்மிளா பாலாஜி குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாலர் பூங்க அமைப்பாளர் கே. வனஜகுமாரி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி மற்றும் பாலர் பூங்கா பொறுப்பாளர்கள் பாரதிராணி, குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.