districts

img

பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவர்கள் மாநாடு

உளுந்தூர்பேட்டை, மார்ச் 19- மாணவிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவிகள் சிறப்பு மாவட்ட மாநாடு உளுந்தூர்பேட்டையில் சனிக்கிழமையன்று (மார்ச் 19) நடை பெற்றது. மாணவிகள் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட உபகுழு அமைப்பாளர் ஏ.கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.மலைவதி வரவேற்புரையாற்றினார். ஆத்தூர் ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கினார். மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வெற்றிவேல், மாவட்ட உபகுழு உறுப்பினர்கள் வி.ஸ்ரீவிஜா, பி.கேப்ரியா, எஸ்.சமுத்திரா ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சின்ராசு நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் வெண்மதி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்
மாணவிகள் பயிலும் அனைத்து கல்வி நிலையங்களிலும் தானியங்கி சானிடரி நாப்கின் இயந்திரம் அமைத்து அதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், மாணவிகள் பயிலும் அனைத்து கல்வி நிலையங்களிலும் பாலி யல் வன்கொடுமைகளை தடுத்திட உள் விசாரணைக் குழு மற்றும் விசாகா கமிட்டிகளை அமைத்து செயல்படுத்திட வேண்டும், மாணவியரின் இடைநிற்றலை குறைத்து சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும், உளுந்தூர்பேட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் 9 பேர்கொண்ட புதிய உபகுழு அமைப்பாளராக ஏ.கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டார்.