districts

img

பருவமழைக்கு முன்பே அடையாற்றை ஆழப்படுத்தி கரைகளை உயர்த்துக முதல்வரிடம் வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு மனு

சென்னை, ஜூலை 6 - பருவமழை தொடங்கு வதற்கு முன்பு அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, கரை களை உயர்த்தி, தடுப்புச் சுவர்  அமைக்க வேண்டும் என்று வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வரத ராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை  புதனன்று (ஜூலை 6) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு  செய்தார். அப்போது முதலமைச் சரிடம், வரதராஜபுரம் நல மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெ. ராஜசேகரன் மனு  ஒன்றை அளித்தார். அதில், அடையாறு ஆற்றை  ஆழப்படுத்துவது, கரைகளை ஒரே சீராக பலப்படுத்துவது, ஆற்றில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர் அமைப்பது போன்ற பணி கள் நடைபெறாமல் உள்ளன. ஆற்றை ஆழப்படுத்தி கரையை 10 அடி உயரத்திற்கும், 13 அடி  அகலத்திற்கும் அமைக்க வேண்டும். அடிக்கடி உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க இரண்டு பக்கங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். வரதராஜபுரம் பகுதி மழை நீரை ஆற்றில் விடுவதற்கு வால்வு ஷட்டர் அமைக்க வேண்டும், அஷ்ட லட்சுமி நகர்,  புவனேஸ்வரி நகர், சாந்தி நிகேதன், ஸ்ரீராம் நகர் விரிவு ஆகிய 4 இடங்களில் 300 எச்.பி.  திறனுள்ள மோட்டர் நிரந்தர மாக அமைக்க வேண்டும்.

தெருக்களில் தன்மைக்கு ஏற்ப மண்சாலை, சிமெண்ட் சாலை. தார்ச்சாலை அமைப்ப தோடு, திட்டமிட்ட இடங்களில் பூங்காவும், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியும் அமைக்க வேண்டும். ராயப்பா நகரி லிருந்து தர்காஸ் வரை ஒரு கிலோ  மீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். மின் கம்பங்கள் சாயா மல் இருக்க அடிப்பகுதியில் 3 அடி உயரத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் பீடம் வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பி களை இழுத்துக் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் கோரிக் கையினை நிறைவேற்ற ஆவன  செய்வதாக உறுதி அளித்தார்.