districts

img

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகும்: அமைச்சர்

சென்னை, மே 21 - தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகும் என்று  மாநில சுற்றுச்சூழல் துறை அமைச் சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தேசிய தூய்மையான காற்று திட்டம் மற்றும் 15ஆவது நிதி ஆணை யத்தின் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தென் மண்டல (தமிழ்நாடு, ஆந்திர பிரதே சம், கர்நாடகா, தெலங்கானா, கேரளா  அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவு கள் புதுச்சேரி டாமன் டையூ, தாதர்  மற்றும் நாகர் ஹவேலி) நகரங்களுக் கான நிதி குறித்த உணர்திறன் மற்றும்  சீராய்வு பயிலரங்கு சென்னையில் சனிக்கிழமை  தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,  தமிழ்நாட் டில் இதுவரை 14 வகையான  பிளாஸ்டிக் தடை செய்யப்பட் டுள்ளது. இந்த ஆட்சியில் 174 பிளா ஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மீண்டும் மஞ்சள் பை  திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். பிளாஸ்டிக் எதில் கலந்தாலும் மாசு ஏற்படுகிறது. நிலம்,  கடல் என அனைத்தும் பாதிக்கப்படு கிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் கூட விதித்து இருக்கிறோம். அதை  அதிகப்படுத்தவும் முடிவு எடுத்திருக் கிறோம் என்றார். இரண்டு ஆண்டிற்குள் குப்பைகளை பிரித்து எடுக்க கூடிய  பணிகளை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வரை 59 இடங்களில் குப்பைகள் பிரிக்கப்பட்டு உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 2 வருட காலத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குப்பைகளையும் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நீர்நிலைகளில் கழிவுகளை கலப்பது என்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து திடக்கழிவு மேலாண்மை செய்வ தற்காக, தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்குவதற்கு திட்ட மிடப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.  முன்னதாக  நிகழ்ச்சியில்  பேசிய  ஒன்றிய சுற்றுசூழல் துறை  அமைச்சர்  புபேந்தர் யாதவ், தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 30 லட்சத்திற்கும் அதிக மான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் தேசிய சுற்றுப்புற காற்று தர நிலை களுக்கு உட்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி பாராட்டினார். ஒவ்வொரு புதன்கிழமையும் புதைபடிவ எரிபொருள் அல்லாத வாகனங்கள்  மூலம் அதிகாரிகள் அலுவலகத் திற்குச் செல்லும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்முயற்சியான இ- கம்யூட் திட்டத்தை அமைச்சர் வரவேற்றார். மற்றொரு புரட்சிகர நடவடிக்கை யாக, பி.எஸ். 6 ரக தரநிலையில்  இந்தியா முன்னேறி இருப்ப தோடு, எரிபொருள் மற்றும் வாக னங்களுக்கான அதன்  விதிமுறை களை ஏற்றுக்கொள்வது, காற்று  மாசுபாட்டை எதிர்த்து போராடு வதற்கான முக்கிய கொள்கை முடிவு களில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.