சென்னை, ஜூலை 31 - மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக முறை யில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்திய மாண வர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூலை 31) எழும்பூரில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், நீட் மற்றும் கியூட் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், துறைமுகம் சட்டமன்ற தொகுதி யில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், கல்வி நிலையங்களில் மாணவி கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும், அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம் படுத்திட வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் மிருதுளா தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஏ.சங்கரய்யா கொடியேற்றி னார். இணைச் செயலாளர் யுகசாந்தி வரவேற்க, துணைத் தலைவர் காரல்சே அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமுஎகச ஈரோடு மாவட்டச் செயலாளர் செழியன்கோ மாநாட்டை தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.விக்னேஷ் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெ.தன லட்சுமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி நிறைவுரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் வே.அருண்குமார் நன்றி கூறினார். 27 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக எம்.அருண்குமார், செயலா ளராக எஸ்.மிருதுளா ஆகியேர் தேர்வு செய்யப்பட்டனர்.