திருவள்ளூர், மே 16- திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள் ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா தமிழ்ச்செல்வி தம்பதியின் மகள் பூவிழி தனியார் கலைக் கல்லூரியில் 2ஆம்ஆண்டு படித்து வருகிறார். பள்ளிப்பருவத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பூவிழிக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பூவிழி சந்தோஷ் இரு வரும் திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் ஆய்வாளர் மங்கள பிரியா, இரு வீட்டாரையும் அழைத்து சமரசப்படுத்தி னார். அப்போது பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருவள்ளூர் நகர ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் ஆகியோர் இரு தரப்பையும் சமாதானப் படுத்தி காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்த னர்.