சென்னை, ஜூலை 3- சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. “பாரதி பில்டர்ஸ் லீக் 2022” என்ற பெயரில் நடைபெற்ற இந்தபோட்டியில் பாரதி ஹோம்ஸ், ரேடியன்ஸ் ரியாலிட்டி, நியூரி பிராப்பர்டீஸ் மற்றும் டிஆர்ஏ ஹோம்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்றன. இதில் பாரதி ஹோம்ஸ் அணிக்கும், ரேடியன்ஸ் ரியாலிட்டி அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் பாரதி ஹோம்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. 86 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பின்னர் விளையாடிய ரேடியன்ஸ் ரியாலிட்டி அணி 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாரதி ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் அருண் பாரதி கோப்பையை வழங்கினார்.