districts

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் சரண்

சென்னை, ஏப். 4 - சென்னை பிராட்வே பேருந்து நிலை யத்தில் திமுக பிரமுகர் சவுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர். சென்னை பிராட்வே பேருந்து நிலை யத்தில் உள்ள தண்ணீர் பந்தலுக்கு திமுக பிரமுகர் சவுந்தரராஜன் ஞாயிறன்று (ஏப்.3) தண்ணீர் கொண்டு வந்தார். அப்போது அடை யாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி யோடியது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் கார்த்திக் குமரேசன், சதீஷ், இன்பா, அதிமுக  பிரமுகர் கணேசன் மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக வசந்த குமார் என்பவரும் கைதாகியுள்ளார்.