districts

img

ரூ.21 கோடியில் பூங்கா, விளையாட்டு திடல்

சென்னை, அக். 5 - சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 21 கோடி  ரூபாய் செலவில் பூங்கா, விளையாட்டு மைதானங்கள் அமைக்க பணியாணை வழங்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காத்துறை 738 பூங்காக்களை பராமரித்து வருகிறது. அரங்கத் துறை 220 விளையாட்டு திடல்கள், 173  உடற்பயிற்சி கூடங்கள், 204 குழந்தை கள் விளையாட்டு திடல்கள் ஆகிய வற்றை பராமரித்து வருகிறது. தற்போது, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 16.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 பூங்காக்களும், 4.50  கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 விளை யாட்டு திடல்களும் அமைக்க ஒப்பந்தம்  கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப் பட்டுள்ளது. புதியதாக அமையவுள்ள பூங்காக்க ளில் நடைபாதை, குழந்தைகள் விளை யாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற் பயிற்சி கருவிகள், சுற்றுச் சுவர், சுவர்களில் வண்ணமயமான ஓவியங் கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உள்ளிட்டவை இடம் பெறும். விளையாட்டு திடல்களில் சுற்று சுவர், சுவர்களில் வண்ண ஓவியங்கள், திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவி கள், கால்பந்து மைதானம், கைப்பந்து  மைதானம், கூடைப்பந்து மைதானம், பாரம்பரிய மர வகைகள், கழிவறை  மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இடம்பெறும். இந்த பணிகள் அனைத்தும் விரை வில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.