பொன்னேரி,அக்.25- சென்னை திரிசூலத் தைச் சேர்ந்தவர் மதன் குமார். என்ஜினீயரான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தீபாவளியையொட்டி உடன் பணிபுரியும் நண்பர்கள் பொறியாளரான அருண், எபினேசர் உள்ளிட்ட 10 பேருடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்தார். அப்போது மதன் குமார், அருண், எபினேசர் ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களை அலை இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றபோது எபினேசரை மட்டும் பத்தி ரமாக மீட்டனர். மதன் குமா ரும், அருணும் தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையே சிறிது நேரத்தில் அதே பகுதி யில் மதன்குமார் உடல் பிணமாக மிதந்தது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோ தனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலை யில் செவ்வாயன்று மீனவர்கள் பயன்படுத்தும் வலை கம்பில் அருணின் உடல் சிக்கியது. அவரது உடலை காவல்துறையினர் மீட்டனர். பழவேற்காடு கடலில் மூழ்கி பொறி யாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.