செங்கல்பட்டு, பிப்.19- செங்கல்பட்டு மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறை யில் நடந்து முடிந்தது. பெண் கள் மற்றும் முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த னர். செங்கல்பட்டு மாவட்டத் தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய 4 நகராட்சிகளுக்கும், கருங் கோழி, அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, மாமல்ல புரம், திருப்போரூர், திருக் கழுக்குன்றம் ஆகிய 6 பேர் பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிமுதல் வாக்காளர்கள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவு மையங்களில் சமூக இடை வெளிவிட்டு நின்று கிரிமிநா சினி மூலம் கைகளை சுத்தப் படுத்தி கொண்டு அனை வரும் வாக்களிதனர். செங்கல்பட்டு மாவட்டத் தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என மொத்த மாக 277 வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1607 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,23,823, பெண் வாக்காளர்கள் 5,43,825, மூன்றாம் பாலினத்த வர்கள்114, என மொத்தம் 10,76,762 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் மாவட்டத்தில் 1066 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் 103 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறிந்து வாக்குச்சாவடி மையங்க ளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக் கப்பட்டது.
மேலும் அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் வாக்குச்சாவடி மையம் அருகே பொது மக்கள் அச்சமின்றி வாக்கு செலுத்த போதுமான காவல் துறையினர் பணியில் ஈடுபட்ட னர். காலைமுதலே ஆர்வத்து டன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது வாக்குகளை செலுத்தினர். திருக்கழுக்குன்றம் போரூராட்சி வாக்குசவடிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்ப்டது. மாமல்லபுரம் பேரூராட்சி 11, 12 ஆகிய வார்டிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் வரிசையில் நின்று வாக்கு களை பதிவு செய்தனர். அதே போன்று மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காண முடிந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ரா. ராகுல்நாத் அனுமந்தபுத்தேரி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.