districts

img

பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு, ஏப். 3 - கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், செங்கல் பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கட்டு மானத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னைக்கு சென்று வருகின்றனர். பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட தாம்பரம், விழுப்புரம் ரயில், சென்னை எழும்பூர் புதுச்சேரி மின்சார ரயில், அரக்கோணம், சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர், விழுப்புரம் மின்சார ரயில், சென்னை - புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த ரயில்கள் அனைத்தும் கொரானா காரணமாக நிறுத்தப்பட்டன. தற்போது தொற்று கட்டுப்பாடுகளை அரசு முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் அரசு பள்ளி கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், கட்டுமான பணிகள், தனி யார் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் முழு மையாக செயல்படுகின்றன. இந்நிலையில் மதுராந்தகம், செய்யூர் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களைச் சார்ந்வர்கள் கிராமங்களிலிருந்து பேருந்து களில் செங்கல்பட்டு வந்து பின்னர் மின்சார ரயில்கள் மூலம் சென்னை சென்ற திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நிறுத்தப்பட்டுள்ள பயணிள் ரயில்களை மீண்டும் இயக்கினால் செய்யூர், மதுராந்தகம் பகுதி கிராமப்புற மக்கள் மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆகிய ரயில் நிலையங்களைப் பயன் படுத்தி சென்னைக்கு சென்றுவர ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புரு சோத்தமன் கூறுகையில், விழுப்புரம், புதுச்சேரி வரை இயக்க கூடிய சிறப்பு ரயிலை பயணிகள் ரயிலாக மாற்றி இயக்க வேண்டும், சென்னை கடற்கரை - மேல்மருவத்தூர் - விழுப்புரம் ரயில், புதுச்சேரி திருப்பதி பயணிகள் ரயில், செங்கல்பட்டு-அரக் கோணம் ரயில் ஆகியவற்றை பழைய கால அட்டவணையில் இயக்க வேண்டும். சேலம் விரைவு வண்டி, உழவன் விரைவு வண்டி மேல்மருவத்தூரில் நின்று சென்றிடவும், அந்யோதயா ரயிலின் அனைத்து பெட்டிக ளையும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்றார், காலை, மாலை நேரங்களில் சென்னை - செங்கல்பட்டு மின்சார ரயில் களை மேல்மருவத்தூர் வரை இயக்கிட வேண்டும். படாளம், அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களை மீண்டும் திறந்து, ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புருஷோத்தமன் வலியுறுத்தி உள்ளார்.