districts

தூய்மைப் பணியாளர்களுக்கு பல மாதம் சம்பளம் இல்லை அரசு தலையிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மார்ச் 19 – செங்கல்பட்டு மாவட்டத் தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும்  தூய்மை பணி யாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியங்களை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசியர் கூட்டணியின்  செங்கல்பட்டு மாவட்ட அமைப்பின் செயற்குழு கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 18) செங்கல்பட்டில் மாவட்டத் தலைவர்  ந.மகா லட்சுமி தலைமையில் நடை பெற்றது மாவட்ட செயலாளர்  மு.சினுவாசன், மாவட்ட பொருளாளர் ஞான சேகரன், மாநில துணைத் தலைவர் பெ.அலோசியஸ் துரைராஜ், மாநில பொருளாளர் மத்தேயு, மாவட்ட துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்  தீனதயாளன் ஆகியோர் பேசினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதிய திட்டத்தை  நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மார்ச் 22ம் தேதி மாலை நேர கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்து வது, மார்ச் 28 அன்று நடை பெறும அகில இந்திய பொது  வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.