districts

img

40 ஆண்டுகளாக சாகுபடி செய்யாத விவசாயிகள் பாசன வசதியால் பழமரக்கன்று சாகுபடி

 செங்கல்பட்டு, மார்ச் 26- செங்கல்பட்டு மாவட்டத்தில், தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு  வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.  மதுராந்தகம் வட்டாரத்தைச் சார்ந்த புக்கத்துறை கிராமத்திலுள்ள கோடித் தண்டலம் கிராமத்தில் 2021-22 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ள தரிசு நில மேம்பாட்டுத் தொகு ப்பினை ஆய்வு செய்தார்கள். இந்த தொகுப்பில் மா, கொய்யா மற்றும் சப்போட்டா ஆகிய 1450 பழமரக் கன்றுகள் சாகுபடி செய்ததையும், இரண்டு  எண்கள் சூரியசக்தி மோட்டார்    அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வை யிட்டார்கள். அப்போது விவசாயிகள் தாங்கள் 40 ஆண்டு காலமாக எவ்வித பயிர் சாகுபடியும் செய்யவில்லை என்றும் தற்போது நல்ல நீர்வசதி உள்ள தால் பழமரக்கன்றுகளை நடவு செய்து பாதுகாத்து வருவதாக தெரிவித் தார்கள். மேலும் தலைமைச் செயலாளர் துறை அலுவலர்களிடம் பழமரக்கன்று களை பராமரித்தல் குறித்த விழிப் புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்திட  வேண்டும் என அறிவுறுத்தினார்.

பவர் டில்லர் இயக்கும் பெண்களுக்கு பாராட்டு 
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் வழங்கினார். அப்போது பவர் டில்லர் பெற்ற பெண் விவசாயி கன்னியம்மாள் என்பவர் தனது கணவர் இல்லாததால் தானும், தனது மகளும் நெல் சாகுபடி செய்து வருதாக தெரிவித்தார். தற்போது தனது மகள் நெல் அறுவடை செய்து வருவதால் இந்நிகழ்விற்கு வரவில்லை எனவும் தெரிவித்தார், மானிய விலையில் பெற்ற பவர் டில்லரை தனது மகள் இயக்குவார் எனவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட தலைமைச் செயலாளர் இரண்டு பெண்கள் மனஉறுதியுடன் விவசாயம் செய்து வருவதை நெகிழ்ந்து, பாராட்டினார்.

அடுத்தாக, பள்ளியகரம் கிரா மத்தில் துரைராஜ் என்கிற விவசாயி நிலத்தில் முதல் முறையாக 3.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள GJG 31 நிலக்கடலை விதைப்பண்ணையை ஆய்வு செய்தார். நிலக்கடலை செடிகளை நிலத்திலிருந்து எடுத்து அதில் அதிக அளவில் திரட்சியான காய்கள் இருந்ததைக் கண்டு, மிகவும் நேர்த்தியாக சாகுபடி செய்து வருவதாக தெரிவித்து, அந்த விவ சாயியை தலைமைச் செயலாளர் பாரா ட்டினார், அடுத்ததாக, அச்சரப்பாக்கம் வட்டாரம், துறையூர் கிராமத்தில் லட்சு மிபதி நிலத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் சாகுபடி செய்யப்பட் டுள்ள CoV 09356 இரக கரும்புப் பயிரினை ஆய்வு செய்தார். சுமார் 2  மாதங்களுக்கு முன்னர் சொட்டு நீர்பாசனம் அமைக்கப்பட்டதாக தலைமைச் செயலாளரிடம் விவசாயி தெரிவித்தார். சொட்டு நீர்பாசனக் கருவி களை நன்கு பராமரித்து, பயன் பெறுமாறு தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டார். பின்னர், தேசிய வேளாண் சந்தைப் பணிகளை ஆய்வு செய்தார. அப்போது இணையதளத்தில் விளைபொருட்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் கல், மண், தூசி, ஈரப்பதம் குறித்த இயற்பியல் ஆய்வு செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டது. இறுதியாக, அச்சரப்பாக்கம் பள்ளி ப்பேட்டை கிராமத்தில் அரசு மானிய உதவியுடன் பால் காளான் உற்பத்தி செய்துவரும் தன்ராஜ் காளான் உற்பத்தி மையத்தினை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிடம், அரசு பங்க ளிப்பு மானியம் குறித்தும், காளான்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படு கின்றது என்பதையும் கேட்டறிந்தார்.