செங்கல்பட்டு, ஏப். 28- செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் ஊராட்சியில், திருநங்கைகளுக்கு 50 வீடுகள் கட்டும் பணியினை மாவட்டஆட்சியர் ஆ.ர.ரா குல் நாத் துவக்கி வைத்தார். இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷனுடன் இணைந்து சமூக பொறுப்பு நிதியின் மூலம் திருநங்கை களுக்கு வீடுகள் கட்டும் அடிக்கல் நாட்டுவிழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள், செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.பாபு ஆகியோர் பங்கேற்றனர். மொபிஸ் இந்தியா சமூக பொறுப்பு நிதியிருந்து தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்காக பணிகள் துவக்கி வைக்கப் படவுள்ளது. மேலும், திரு நங்கைகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்திட தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்றார்.