செங்கல்பட்டு,ஏப். 1- மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா நடை பெற்றது. கல்லூரி மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர் ஒன்றிணைந்து விழிப்பு ணர்வு போர்டுகளை கையில் ஏந்தி புராதன சின்னங்கள் பகுதியில் ஊர்வலம் சென்றனர். தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான சத்துள்ள உணவுகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சத்துள்ள உணவுகளை வீட்டில் தயாரித்து எடுத்து வந்து அதை காட்சிக்கு வைத்திருந்தனர். விழாவில் செயல் அலுவலர் கணேஷ் தலைமை தாங்கினார்.