districts

img

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.55 கட்டாய வசூல்

செங்கல்பட்டு, ஏப் 16 - அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசயிகளிடம் 55 ரூபாய்  கட்டாய வசூல் செய்யப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத் தில் கடந்த ஆண்டு பெய்த  அதிக பருவ மழையின்  காரணமாக அனைத்து ஏரிக ளும் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 25 ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் நெல் விளைச்சல் அமோகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 89 அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களை தொடங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதில், விவாசாயி களிடம் இருந்து வியாபாரி கள் நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதன்படி, செய்யூர் வட்டம் அணைக்கட்டு கிரா மத்திலும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கொள்முதல் நிலைய அலுவலர் விவசாயிடம் மூட்டைக்கு 55 ரூபாய் கொடுத்தால் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் என்ற தொலைபேசி உரை யாடல் சமூக வலைதளத்தில் பரவி வருவது பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு நேரடி நெல்  கொள்முதல் நிலையங்களி லும் மூட்டை ஒன்றுக்கு 55 ரூபாய் வசூல் செய்கின்றனர். இதில், கோணிக்கு 2 ரூபாய்,நெல்லை தூற்றி மூட்டை பிடித்து லாரியில் ஏற்றுவதற்கு 20 ரூபாய், லாரி யில் எடுத்து செல்ல 20 ரூபாய், அதிகாரிகளுக்கு 8 ரூபாய், எஞ்சிய தொகை அரசியல் பிரமுகர்களுக்கு என பிரித்துக கொள்கின் றனர். அரசியல் பிரமுகர்க ளின் இடத்தில் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப் படுகிறது. இதனால் அவர்க ளின் ஆதிக்கம் அதிக அள வில் உள்ளது என குற்றம் சாற்றினர். இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி எஸ்.ரவி  குறிப்பிடுகையில், விவசாயி களிடம் வசூல் செய்யப் படும் 55 ரூபாயில் அரசு  அலுவலர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினருக்கும் பணம் செல்கிறது. இதை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள வர்களே தெரிவிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தும் இந்த நிலை தொடர்கிறது. இந்த அடாவடி வசூலை எதிர்த்து கேட்கும் விவசாயிகளை அரசியல்வாதிகள் மிரட்டும் நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இத்தகைய புகார் குறித்து அணைகட்டு அரசு நெரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மங்கை யிடம் கேட்டபோது, அரசு கோணியை இலவசமாக வழங்குகிறது. நெல்லை தூற்றி கோணிப்பையில் பிடித்து லாரியில் ஏற்று வது வரை அனைத்து செலவு களையும் அரசு ஏற்றுக்  கொள்கிறது. அணைக்கட்டு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒருங்கிணைப் பாளராக இருக்கும் ராஜி  எனபவர்தான் இதனை கவனிக்கிறார். அதிகாரிகள் பணம் ஏதும் பெறுவ தில்லை. அவர் பெறுவதாக தெரிகிறது என்றார். இதுகுறித்து செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத்திடம் கேட்டபோது, “புகார் குறித்து  விசாரித்து உரிய நடவடி க்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.