districts

img

மே தின சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

அரியலூர், மே 1 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் தென்கச்சி பெருமாள் நத்தம் ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து  நடைபெற்ற கூட்டத்தில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் யூரியா தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்து பொதுமக்கள் கூட்டத்தில் பேசினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமத்தில் அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உரிய விசாரணை எடுக்கப்படும் என்றார்.

பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் கீதா சோலையப்பன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி நிதி வரவு-செலவு அறிக்கை குறித்த பிளக்ஸ்போர்டு வைக்கப்பட்டு, வரவு-செலவு அறிக்கை நோட்டீசாக அடித்து பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. 

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.