அரியலூர், மார்ச் 4- அரியலூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள் ளதையடுத்து, திமுக சார்பில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள சாந்தி கலைவாணன் சனிக்கிழமை தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அரியலூர் நகராட்சியை திமுக கைப்பற்றியதையடுத்து நகராட்சியின் தலை வராக சாந்தி கலைவாணனை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சாந்திகலைவாணன் அரியலூர் நகராட்சியின் 4 ஆவது தலைவராகவும், 2 ஆவது பெண் தலைவராகவும் சனிக்கிழமை பொறுப்பேற்கிறார். அரிய லூர் நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியதன் மூலம் அரியலூர் நகரம் திமுக கோட்டையானது.
பெருமகளூர் பேரூராட்சி
தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பேரூராட்சி தலைவராக திமுக வைச் சேர்ந்த சுந்தரத்தமிழ் (திமுக) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சித்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவ லர் புனிதவதி சான்றிதழ் வழங்கினார்.
குடவாசல் பேரூராட்சி
21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலை வர்கள், துணைத் தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. குடவாசலில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் துணை தலைவர் தேர்தலில் திமுகவைச் சார்ந்த மகாலட்சுமி முரு கேசன் தலைவராகவும், கே.குணசேகரன் துணைத் தலைவராகவும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பேராவூரணி பேரூராட்சி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுக்கான உறுப்பி னர் தேர்தலில் 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று பேரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சாந்தி சேகர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத தால் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேர்தல் நடத்தும் அலுவலர் பா.பழனிவேல் அறிவித்தார். நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் 2 ஆவது வார்டு வேட்பாளர் கி.ரெ.பழனிவேல் (திமுக) போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்மாப்பேட்டை பேரூராட்சி
மெலட்டூர் அருகே அம்மாப்பேட்டை பேரூராட்சித் தலைவராக திமுக வைச் சேர்ந்த ஷோபா, துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ரமேஷ் போட்டியின்றி தேர்வாகினர். இவர்களுக்கான பதவி பிரமாணத்தை அம்மாப் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா செய்து வைத்தார். தலைவ ரான ஷோபாவும், துணைத் தலைவரான ரமேஷும் கணவன், மனைவி என்பது குறிப்பிடத் தக்கது. மெலட்டூர் பேரூராட்சித் தலைவராக திமுக வைச் சேர்ந்த இலக்கியா, துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன்னழகு சீனு போட்டியின்றித் தேர்வாகினர். இவர்களுக்கான பதவி பிரமாணத்தை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் செய்து வைத்தார்.
கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில், 43 இடங்க ளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் 1 இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கரூர் மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 22 பெண் வேட்பா ளர்கள் போட்டியிட்டனர். போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து, கரூர் மாநகராட்சியில் வெள்ளியன்று மேயர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், திமுகவை சேர்ந்த கவிதா கணேசன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் மேயருக்கான இருக்கையில் கவிதா கணேசனை மாநக ராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அமர வைத்தார். திமுக நிர்வாகிகள் மாநக ராட்சி மேயருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து துணை மேயராக தாரணி சரவணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மறைமுக தேர்தலில் இரண்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்..
பட்டுக்கோட்டை நகராட்சி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெள்ளியன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 22 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சண்முகப்பிரியா வெற்றி பெற்றார். துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 13 பேர், சுயேட்சைகள் 2 பேர் மட்டுமே வந்திருந்தனர். திமுக உறுப்பினர்கள் யாரும் வராத நிலையில், துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் சுப்பையா தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி தேர்வு செய்யப்பட்டார்.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி நகர்மன்ற தலைவர் தேர்தலில் நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கலைச்செல்வி சிவகுமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு சுரேஷ் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான மனோகரன் அறிவித்துள்ளார். இதேபோல் தா.பேட்டை பேரூராட்சி தலைவராக ராஜலட்சுமி கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் பேரூராட்சி தேர்தலில் தலைவராக சௌந்தரராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் குமார் அறிவித்துள்ளார். காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 7 ஆவது வார்டு உறுப்பினர் சங்கீதா சுரேஷ் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமாராணி அறிவித்துள்ளார். தொட்டியம் பேரூராட்சியில் சரண்யா பிரபு பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் அறிவித்துள்ளார்.
தரங்கம்பாடி பேரூராட்சி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியின் தலைவராக திமுக வேட்பாளர் சுகுணசங்கரி போட்டியின்றி தேர்வானார். தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் மூன்று வார்டுகளுக்கு உறுப்பி னர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 வேட்பாளர்களுக்கு கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 15 வார்டுகளிலும் திமுக உறுப்பி னர்களே வெற்றி பெற்று கடந்த மார்ச் 2 ஆம் தேதி பதவியேற்றனர். அதன் தொடர்ச்சியாக வெள்ளியன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு 14 ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி மற்றும் 5 வது வார்டு அதிமுக உறுப்பினர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். இதில் அதிமுக வார்டு உறுப்பினர் தாக்கல் செய்த மனுவை முன்மொழிந் தும், வழிமொழிய ஆள் இல்லாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப் பட்டது. இதையடுத்து, 14 ஆவது வார்டு திமுக உறுப்பினர் சுகுணசங்கரி போட்டி யின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் உறுதி செய்யப் பட்டார். இதையடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்ட சுகுணசங்கரிக்கு பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன், பேரூ ராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் திமுகவினர் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.