அரியலூர், ஏப்.7- தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டு பேசிய ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க. கண்ணன் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய தாலுகாக்களில் முந்திரி மானாவாரி பயிராக 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. அது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுடைய வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆண்டொன்றுக்கு 20,000 டன் முந்திரி அறுவடை செய்யப்படுகிறது. முந்திரிக்கு ஏற்கெனவே நிரந்தர விலை இல்லை. விலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. எனவே, முந்திரி உடைப்பது, முந்திரி பழச்சாறு தயாரித்தல் மற்றும் முந்திரியை மதிப்புக் கூட்டி உணவுப் பொருட்களாகத் தயாரித்தால் பொது விநியோகத் திட்டத்தின்மூலம் பொது மக்களுக்கு வழங்கலாம். வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய லாம். இதனால், அந்நிய செலாவணி மூலம் வருமானம் பெற முடியும். தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, முந்திரி விவசாயிகள் லாபம் பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனவே, அரசு சார்பில் எந்த தொழிற்சாலை யும் இல்லாத ஜெயங்கொண்டம் தொகுதியில், முந்திரி தொழிற் சாலையை அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என கோரினார். இதற்கு பதிலளித்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்: அரியலூர் மாவட்டத்தில் 30,579 ஹெக்டர் நிலப்பரப்பில் முந்திரி பயிரிடப்படு கிறது. 10,570 டன் முந்திரி கொட்டை மகசூல் செய்யப்பட்டு, அவற்றைப் பதப்படுத்தி 2,496 மெட்ரிக் டன் அளவில் முந்திரி பருப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு நடுத்தரத் தொழில் நிறுவனம் மற்றும் 23 குறு, சிறு முந்திரி பதப் படுத்தும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிறுவ னங்களுக்குத் தேவையான மூலப் பொருளான முந்திரிக் கொட்டைகள் பற்றாக்குறையாக உள்ளதால், இந்நிறுவனங்களுக்குத் தேவை யான முந்திரிக் கொட்டைகள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. முந்திரி தொழிற் சாலை அமைப்பதற்கான சாத்தி யக்கூறுகள் இல்லை என கூறினார். முந்திரிக்கு சரியான விலை நிர்ணயம் செய்வதற்காக, பிற மாநிலங்களைப் போலவே தமிழ கத்திலும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், ஆண்டி மடம் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தனியார் தொழிற்சாலை ஏற்கெ னவே இயங்கி வந்தது. அது தற்போது செயல்படாத கார ணத்தால், 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது வேலைவாய்ப்பை இழந்திருக்கி றார்கள். ஏதேனும் தனியார் தொழில் முனைவோர் முந்திரி தொழிற்சாலை தொடங்கினால், அதற்கு அரசு உதவி செய்வதற்கு முன்வருமா என்பதைத் தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன் பேசினார் அதற்கு பதிலளித்துப் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஜெயங்கொண்டம் தொகுதியில் தனியார் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்க அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. 2021-2022 ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலமாக புதிய தொழில் முளைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2 நிறுவனங்க ளும், வேலையில்லா இளைஞர்க ளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 1 நிறுவனமும், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 1 நிறுவனமும் என 4 முந்திரி ஆலைகளுக்கு ரூ. 8,06,000/ மானியத்துடன் ரூ.19,96,000/- திட்ட மதிப்பிலான கடன் வழங்கப்பட்டு, தொழில்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் தொழில் முனை வோர் யாரேனும் தொழில் தொடங்கு வதற்கு முன்வந்தால், இந்தத் துறையின் சார்பில் கடன் வசதி வழங்கி, அவர்களுக்குத் தேவை யான ஆலோசனைகளையும் வழங்கி, அவர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்படும் என தெரிவித்தார்.