districts

img

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்

செங்கல்பட்டு, அக். 11- பழுதடைந்த சாலையை  சீரமைத்துத் தர வலியுறுத்தி 3 கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம்,  கல்பாக்கம் அடுத்த கானத்தூர், கொடப்பட்டி னம், அங்காளம்மன் மீனவர் குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன, இக்கிராமங்களில்  2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களின்  அத்தியாவசிய தேவை களுக்காக கூவத்தூர் மற்றும் கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தாக வேண்டும். இந்நிலையில் இக்கிராமங்களில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை 3 கிலோ மீட்டர் தூரம்  உள்ள சாலை கடந்த 12  ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படு கிறது. தற்போது அந்த சாலை  முழுவதும் பழுதாகி பயன் படுத்த முடியாத  நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல முறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலை யில்  பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைத்திட வலியுறுத்தி செவ்வாயன்று ( அக் 11) 3 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவர்கள் கூவத்தூர் பகுதியில் சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை யில்   மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து  வந்த கூவத் தூர் காவலர்கள் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.