வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அண்மையில் வழங்கியது. இதற்காக அவருக்கு தமிழியக்கம் சார்பில் சென்னையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், ஜி.விஸ்வநாதனுக்கு ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.