districts

img

ஆட்டோ தொழிலாளர் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அநியாயமாக உயர்த்தப்பட்ட எப்சி கட்டணத்தை குறைக்க வேண்டும், 15 வருட பழைய ஆட்டோ, டாக்ஸி, வேன் ஆகியவற்றிற்கு எப்சி கட்டணம் 10 மடங்காக உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், சாலை போக்குவரத்து சங்க மாவட்டத் தலைவர் ஜி.கேசவன் ஆகியோர் தலைமையில் தாங்கினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி.முரளி, சாலை போக்குவரத்து மாவட்டச் செயலாளர் என்.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.