districts

img

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் மீண்டும் அமோக வெற்றி


வேலூர், ஜூன் 5- அரக்கோணம் மக்களவைத் தொகுதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் என 3 மாவட்ட இணையும் தொகுதி யாகும். திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப் பேட்டை, ஆற்காடு என 6 சட்ட மன்றங்களை உள்ளடக்கியதாகும்.7 லட்சத்து 60ஆயிரத்தி 345 ஆண் வாக்காளர்கள், 802361 பெண் வாக்காளர்கள், 165 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் என மொத்தம் 1562871 வாக்காளர் கள் உள்ளனர். அரக்கோணம் மக்க ளவைத் தொகுதியில் மொத்தம் 1562871 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1159441 வாக்குகள் பதிவானது. 2130 அஞ்சல் வாக்குகள் பதிவானது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 306559 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 563216 வாக்குகள் பெற்றார்.  அதிமுக வேட்பாளர் எல்.விஜயன் 256657 வாக்கு களும், பாமக வேட்பாளர் பாலு 202325 வாக்கு களும்  நாதக வேட்பாளர் ஆசிபா நஸ்ரின் 98944 வாக்குகளும் பெற்றனர். நோட்டா வில் 12613 வாக்குகள் பதிவாகியிருந்த்து.  நிரா கரிக்கப்பட்ட வாக்கு 2386 வாக்குகள் பதி வாகியுள்ளது.

நான்குமுறை எம்பி 

வெற்றிபெற்ற ஜெகத்ரட்சகன் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 3வது முறையாக எம்பியாகியுள்ளார். எம்ஜி ஆர் காலத்தில் நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். 1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக எம்பியாக நாடாளு மன்றத்துக்குள் நுழைந்தார். 1985-89-ல் அதிமுக மக்களவை குழுத் தலை வராகவும் இருந்தார். 

 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான 11,69,677 வாக்குகளில் திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் 672,190 (57.47%) பெற்று 328956 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி (29.34%) 343234 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
 

;