விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டன. அதில், சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வு பணியில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தற்போது 2.28 செ.மீ உயரமும், 2.15 செ.மீ அகலமும் கொண்ட ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெக்கப்பட்டது.