ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் சார்பில் நெமிலி ஊராட்சி ஒன்றியம் பள்ளூர் கிராமம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கி ணைந்த மருத்துவ முகாம் புதனன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேலு, சைபுதீன், பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.