மதுரை,நவ.21- மியான்மாரில் சிக்கி மீண்டுவந்த இளைஞர்கள் சு. வெங்கடேசன் எம் பி யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த னர். தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்தியா மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்களை ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப் பட்டுள்ளதாகவும், மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயு தம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது உள்ளது. இங்கேதான் இந்திய மற்றும் அந்நிய குடிமக்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையில் இருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் வேலைக்கு சென்று சிக்கிக்கொண்ட மதுரையைச் சேரந்த இளைஞர்கள் காமேஷ் மாதவன், அஜய் ஜடேஜா, சிதம்பரவர்மன் மற்றும் ஞானப்பிரகாஷ் ஆகிய நால்வரின் பெற்றோர்கள் மியான்மரில் சிக்கியுள்ள தங்களது பிள்ளைகளை மீட்டு தருமாறு மதுரை எம் பி சு. வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் மியான்மரில் சிக்கித்தவிக்கும் 4 தமி ழர்களை மீட்க வேண்டும் என்று 21.09.2022 அன்று கடிதம் எழுதினார். அதற்கு மியான்மரில் உள்ள இந்திய தூதர் வினய் குமார் 23.09.2022 அன்று பதில் கடிதம் எழுதியி ருந்தார். அதில் இந்தியர்களை மீட்பதற்கு உடனடியாக முயற்சிகள் எடுக்கப்படுவதையும் அதன்மூலம் மியா வாடி பகுதியில் உள்ள 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள தாகவும் மற்றவர்களையும் விரைவில் மீட்க பணிகள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தொடர் முயற்சியின் காரணமாக மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் மீட்கப்பட்டு வீடு திரும்பியுள்ள னர். அந்த இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் சு. வெங்கடேசன் எம் பி யை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பெருமகிழ்வை வெளிப்படுத்தினர். மேலும் மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற இளைஞர்களையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.