districts

தடுப்பூசி போடாதவர்கள் போட்டதாக தகவல் வந்தால் புகார் தெரிவிக்கலாம்

சென்னை,டிச.7- தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இதுவரையில் 7 கோடி 17 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளன. இன்னும் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி இதுவரையில் போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தீவிர  முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு சிலருக்கு தடுப்பூசி போடாமலேயே போட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இதுபோன்ற தவறு எப்படி நடக்கிறது என்பதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில் சிறப்பு அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தொடர்பு  எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் கூறியிருப்பதாவது:- தடுப்பூசி போடதாவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக ஒரு சிலருக்கு தகவல் வந்ததாக சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தவறு எப்படி நடந்தது என்று  ஆய்வு செய்யப்பட்டது. செல்போன் நம்பரை பதிவு செய்யும் போது தவறுதலாக ஒரு எண்ணை  மாற்றி பதிவு செய்ததால் இதுபோன்ற தவறுகள்  ஏற்பட்டதாக தெரிகிறது.

தடுப்பூசி செலுத்தக் கூடியவர்களின் செல்போன் எண் சான்றிதழ் வழங்குவ தற்காக வும், எந்த தேதியில் முதல் தவணை, 2-ம் தவணை  செலுத்தப்பட்டது போன்ற விவரங்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. அதே போல தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்களுக்கும் இந்த செல்போன் வழியாக குறுஞ் செய்தியாக அனுப்பப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால், 5 பேரும்  ஒரே எண்ணை கொடுக்கலாம். 4 பேர் தடுப்பூசி  செலுத்தி இருக்கலாம். ஒருவர் போடாத நிலை யில் அவருக்கும் தவறான பதிவால் தடுப்பூசி போட்டதாக தகவல் சென்று விடுகிறது. இது முகாம்களில் தற்காலிக ஊழியர்கள் பதிவு  செய்யும் போது கவனக் குறைவால் ஏற்படுகிறது. 7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில் 4 அல்லது 5 பேருக்கு இதுபோன்ற தவறான  தகவல் சென்றுள்ளது. இதுபோன்ற தவறுகள்  நடக்காமல் இருப்பதற்காக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் 46 சுகாதார மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு அவர்களின் செல்போன் எண்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், செலுத்திக் கொண்டதாக யாருக்கேனும் தகவல் வந்தால் அவர்கள் உடனடியாக கீழ்கண்ட எண்  களுக்கு புகார் தெரிவிக்கலாம். சில களப்பணி யாளர்கள் செய்கின்ற தவறுகள் இனி நடைபெறா மல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் வாரியாக புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் விவரம்:- அறந்தாங்கி 9442962738, அரியலூர் 9865177416, ஆத்தூர் 9787117030, சென்னை 9941491164, செய்யாறு 9500659593, கோவை 9894338846, செங்கல்பட்டு  9751487318, கடலூர்  9443737905, தருமபுரி 9790284264, திண்டுக்கல் 8754541244, ஈரோடு 9894338846, கள்ளக்குறிச்சி  9443737905, காஞ்சிபுரம் 9751487318, கரூர்  8012015540, கோவில்பட்டி 9092280164, கிருஷ்ணகிரி 9488091641, மதுரை 9244861327, மயிலாடுதுறை 7904821308, நாகை 7904821308, நாகர்கோவில்  9791582914, நாமக்கல் 9994724455, பழனி 9843557724, பரமக்குடி 9994051625, பெரம்பலூர்  9443835677, பூந்தமல்லி 7708991059, புதுக்கோட்டை 9443046324, ராமநாதபுரம் 9994051625, ராணிப்பேட்டை 8754224556, சேலம் 9842946703, தென்காசி 8248722957, சிவகங்கை 9442106748, சிவகாசி 9500925440, தஞ்சாவூர் 9865177416, தேனி 9894887136, திருவள்ளூர்  7708991059, திருவாரூர் 9442456080, திருச்சி  9944842742, திருநெல்வேலி 9442126179, திருப்பத்தூர் 9842433364, திருப்பூர் 9677447084, திருவண்ணாமலை 7299384974, தூத்துக்குடி 9092280164, ஊட்டி 9585018777, வேலூர் 9952827303, விழுப்புரம் 9865552258, விருதுநகர் 9500925440.