திருவனந்தபுரம், ஜுலை 27- அரசின் புதிய மதுக் கொள்கை யால் செத்து (கள் இறக்கும்) தொழிலா ளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரி வித்தார். மூன்று நட்சத்திர வகைப்பாட்டிற்கு மேல் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் ஓட்டல்கள், தங்கள் வளாகத்தில் மரங்க ளை நட்டு, தங்களுடைய விருந்தினர்க ளுக்கு தரமான கள்ளை வழங்கலாம் என்பது கொள்கை. விரைவில் கள் வாரியத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். புதிய மதுபானக் கொள்கையால் கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது. தவறான புரிதலின் அடிப்படையில் இத்த கைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கள் தொழிலை நவீனப்படுத்தாமல் முன்னேற முடியாது. இன்று போல் எதிர்காலம் இல்லை. தொழிலாளர்களையும், கள் தொழி லையும் பாதுகாப்பதே அரசின் எண்ணம் புதிய முறையில் மட்டுமே இனி இந்த தொழிலை பாதுகாக்க முடியும். அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக் கப்படுகிறது. மதுபானக் கொள்கைக்கு சுற்றுலாத் துறையின் எதிர்வினை மிகவும் சாதகமாக உள்ளது. கேரளா விற்கு சுற்றுலா மிகவும் முக்கியமானது. கேரளாவின் பொருளாதாரத்திற்கு சுற்றுலா மிகவும் முக்கியமானது. அர சாங்கம் யதார்த்தமான மற்றும் சமநிலையான மதுபானக் கொள்கை யை வகுத்துள்ளது. அதன் மீதான குற்றச் சாட்டுகளை அரசியலாக மட்டுமே பார்க்க வேண்டும். வெளிநாட்டு மதுபான ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் அதி கரிப்பதே இதன் நோக்கம். மதுக் கொள்கை விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டலுக்கு உதவும் வகையில் உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து மிதமான மதுபானம் தயாரிக்கும் திட்டமும் இதுபோன்றதுதான். பெருந் தோட்ட அடிப்படையில் ஏனைய பகுதி களில் கள் இறக்குவதை ஊக்குவிக்கும் அணுகுமுறை இருக்கும்.
இவை அனைத்தும் விவசாயிகளுக்கு பய னுள்ளதாக இருக்கும். மிகத் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய மதுக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை. அரசாங்கம் ஒருபோதும் தடை பற்றி குறிப்பிடவில்லை. எதிர்கட்சி தலைவர் கூறுவது உண்மைக்கு முரணா னது என்பதற்கு உதாரணம் காட்டுவோம். இப்போது அரசு மது அருந்துவதை ஊக்குவிக்கவில்லை. முதல் பினராயி ஆட்சியில் விமுக்தி மிஷன் தொடங்கப் பட்டது. யுடிஎப் ஆட்சிக் காலத்தில் அத்தகைய இலக்கு எதுவும் இல்லை. 14 மாவட்டங்களிலும் போதை ஒழிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக போதைக்கு எதிராக, நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழும் வகையில் மக்களைத் திரட்டும் பிரச்சா ரம், மாநில அளவில் இருந்து வார்டு - கல்வி நிலையங்கள் வரை, போதை ஒழிப்புக் குழுக்களின் தொடர் கண்கா ணிப்பு, இவை அனைத்தும் செயல் படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தில் கலால் துறை மிகவும் திறம்படவும் வலுவாக வும் செயல்பட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு பரோல் வழங்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சகம் புதனன்று (ஜுலை 26) உத்தரவு பிறப்பித்தது. இந்த விசயத்தில் அரசின் உறுதிப்பாடு தெளிவாக உள்ளது. இதனை கண்டு கொள்ளாதது போன்று காட்டி அரசியல் குற்றச் சாட்டை எதிர்கட்சி தலைவர் முன் வைத்துள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.