districts

காணாமல்போன வரத்துக் கால்வாயை கண்டுபிடிப்பது யார் பொறுப்பு?

இராஜபாளையம், டிச.5- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் புத்தூர் பகுதியில் உள்ள பெரிய முல்லைக்கொடி கண்மாயின் வரத்து கால்வாயை கண்டறிந்து உடனடியாக கண் மாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் வருவாய் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே புத்தூர் பகுதியில் பெரிய முல்லைக்கொடி கண்மாய் உள்ளது. இந்த கண் மாய் பாசனத்தில் 50க்கும் மேற்பட்ட நெல் விளையும் நஞ்சை நிலங்களும், இதர நிலங்களும் உள்ளன. இந்த கண்மாய் கடந்த 3  ஆண்டு காலத்திற்கு மேலாக நிரம்ப வில்லை.  இதனால், அப்பகுதியில் நெல் எது வும் போடாமல் தரிசு நிலமாகவே  வைத்துள்ளனர். காரணம் இந்த கண்மா ய்க்கு வரவேண்டிய வரத்துக் கால்வாய் காணவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம்  இனாம் கோவில்பட்டி வழியாக  வரத்து கால்வாயை அடைத்து சாலை அமைத்ததால்இந்த கால்வாய்க்கு வரவேண் டிய தண்ணீர் பூங்கொடி கண் மாய் பெருகி இனாம் கோவில் பட்டி கண்மாய்க்கு நேரடியாக சென்று விடுகிறது.  வரத்து கால்வாய் அடைக்கப் பட்டதால் பெரிய முல்லைக் கொடி  கண்மாய்க்கு தண்ணீர் வரத்து  முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.  மேலும், கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர்சாலை வழியாக பெருக்கெ டுத்து ஓடுகிறது.  இதுகுறித்து விவசாயிகள் விருது நகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்  தெரிவித்தால், தென்காசி மாவட்டம்  இனாம் கோவில்பட்டி பகுதியில் உள்ள தால் தென்காசி மாவட்டம் செல்லுமாறு கூறியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில்  புகார் மனு அளித்தால் கண்மாய் இருக்கும் இடம் விருதுநகர் மாவட்டம்  என்பதால் விருதுநகர் மாவட்டத்தி லேயே புகார் செய்யவும் தெரிவிக்கின்ற னர். இரு மாவட்ட எல்லைகளில் இருப்பதால் விவசாயிகள் கடுமையான  துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.  எனவே, உடனடியாக அந்த கண்மாய் கால்வாய் இருக்கும் இடத்தை  கண்டறிந்து கால்வாயை அமைத்து  பெரிய முல்லைக்கொடி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடும்படி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;