districts

img

மதுரை பரவை-துவரிமான் இடையிலான பாலம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

மதுரை, அக்.3- மதுரை துவரிமான்-பரவை இடையே கூட்டு றவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் கே.ராஜூ காலத்தில் கட்டப்பட்டது. இவர் தான் இந்தத் தொகுதி யின் இப்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் கூட  அதுவும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அறி விக்கப்பட்டது இந்தப் பாலம் அமைக்கும் பணி. அதிமுக  ஆட்சியில் கட்டி முடிக்கப் பட்ட பாலத்தை திறக்க குரல் கொடுக்காமல், இதில் உள்ள உண்மைப் பிரச்சனையை யும் கூறாமல் அவர் அமைதி யாக இருப்பதன் காரணம் தான் புரியவில்லை இந்தப் பாலத்தின் ஒரு  பகுதி மதுரை-மேலக்கால்  இடையே துவரிமான் சாலை யோடு இணைக்கப்பட்டு விட்டது. மறுபுறத்தில் பரவை பிரதான சாலையோடு இணைக்கப்படவில்லை. பாலம் வைகையாற்றில் “எனக்கென்ன” என  நிற்கி றது. இதற்குக் காரணம் பரவை வைகையாற்றிலி ருந்து பிரதானசாலையோடு இணைக்கும் பகுதியில் குடி யிருப்புகள் உள்ளன. முன்  னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிக் கப்பட்ட பிறகும் பரவை பேரூராட்சி நிர்வாகம் அப் பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ இப் பிரச்சனையில் தலையிட்டு வைகையாற்றில் கட்டப் பட்டுள்ள இணைப்புப் பாலத்தை பரவையின் பிர தான சாலையோடு இணைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண் டும்.அதே நேரத்தில் தற் போது குடியிருக்கும் மக்க ளுக்கு பொருத்தமான மாற்று இடத்தை வழங்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் அவர் திறக்க வில்லை.  மதுரை ஆட்சியர் அனீஷ்  சேகர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு துவரிமானில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது இந்தப் பாலத்தையும் சென்று பார் வையிட்டு வந்தார். பாலம் எப்போது திறக்கப்படும்  என்பதுதான் மர்மமாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் இந்தப் பாலத்தை  திறப்பதற்கு உரிய நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்.