மதுரை,செப்.28- மதுரை கொட்டாம் பட்டியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 732 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியால் மாவட்ட ஆட்சி யர், மாவட்ட நிர்வாகம், பல்வேறு துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மதுரை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு முகாம் நடை பெற்று வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் செப்டம் பர் 28 அன்று மாற்றுத் திற னாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் புதிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவி களை மாற்றுத்திறனாளி களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். இதில் மதுரை மாவட்ட துணை ஆட்சியர் சரவணன், மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்தி ரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா ,தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்து கொ டுத்தனர். தன்னார்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், காவல் துறையினர் இணைந்து பணியாற்றினர். இந்த முகாமில் 1014 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை, மறுமதிப்பீடு அட்டை, தனித்துவ அடை யாள அட்டை, காதொலிக் கருவி, உதவித்தொக, இலவச பேருந்து, ரயில் பயண சலுகை தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் 732 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் பட்டன.