மதுரை அக் 7- மதுரை திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாவிற்காக வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 1800 மாற்றுத் திறனாளிகளுகான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், பல்வேறு துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மதுரை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகா மற்றும் திருமங்லகம் நகர் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் புதிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவி களை மாற்றுத்திறனாளிகளுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் ஆகியோர் வழங்கினர்.
இதில் , மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன், துணை அலுவலர் சுபாஷ், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஜீ.மூர்த்தி , முத்துராமன் ,மாற்றுத்திறனாளி சங்க மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி, மாவட்டச் செயலாளர் வி.முருகன், மாவட்டப் பொருளாளர் சின்னகருப்பன், மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிபாசு, காங்கிரஸ் தலைவர் பாண்டியன் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராமன், திமுக கவுன்சிலர்கள் திருக்குமார், வீரகுமார், சின்னசாமி. நகர தலைவர் செளந்தரராஜன் ஆகியோர் பலர் கலந்துகொண்டனர். ஆர்டிஒ அபிநயா , தாசில்தார் சிவராமன், திருமங்கலம் பிடிஒ இளங்கோ மற்றும் தன்னார்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் இணைந்து பணியாற்றினர். இந்த முகாமில் 1800க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மறுமதிப்பீடு அட்டை, தனித்துவ அடை யாள அட்டை, காதொலிக் கருவி, உதவித்தொக, இலவச பேருந்து, ரயில் பயண சலுகை, தொழுநோய் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் , கைபேசி, வேலை வாய்ப்பற்றோர்க்கு நிவாரண தொகை, ஆவின் முகவர்கள் நியமனம், உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் என மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுகான உபயோகபடுத்தும் கிட், மூன்று சக்கர சைக்கிள், போன்றவை வழங்கப்பட்டன.