இராமநாதபுரம், பிப்.23- இராமநாதபுரம் மாவட்ட வாரச்சந்தைகளில் குத்தகைதாரர்கள் தரைக்கடை வாடகை வசூல் செய்ய வரும்போது பேரூராட்சி செயல் அலுவ லர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். வாடகைக்கு குத்தகைதாரர்கள் ரசீது வழங்க வேண்டும் .வாடகை தொடர்பான அறிவிப்பு பலகைகள் வார சந்தையில் வைக்கப்பட வேண்டும். வாரச்சந்தை வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்படுத் தித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வியாழக்கிழமையன்று முது குளத்தூரில் வாரச் சந்தை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. சிஐடியு வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்ற என்று சிஐடியு முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முத்து விஜயன் ,வாரச்சந்தை வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் எம் ராமு, அண்ணாதுரை, ஆலடீஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.