districts

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியாக நிலைநிறுத்தப்படும் நீர்மட்டம்

தேனி ,டிச.14- முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து 142 அடியாக நீர்மட்டம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது .  முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு 142 அடியாக தண்ணீர் தேக்கப்பட்டது. அதன் பிறகு மழை சற்று குறைந்த போதிலும் உபரி நீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு திறக்கப்பட்டு நீர் மட்டத்தை 141 அடிக்கு கீழ் குறைய விடாமல் கண்கா ணிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 30- ஆம் தேதி முதல் ஞாயிறு  வரை அணை யின் நீர் மட்டம் 13 முறை 142 அடி வரை  நிலை நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை  காலை அணையின் நீர்மட்டம் 141.95 அடியாக இருந்ததால் அணை யில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 700 கன அடியாக குறைக்கப் பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமை  காலை 14-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது.

நீர் பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்து விட்ட போதிலும் ஒரே ஆண்டில் 14 முறை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீர் வரத்து 1023 கன அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 700 கன அடி வீதமும், கேரள பகுதிக்கு 144 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நீர் இருப்பு 7666 மி.கன அடி யாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம்  142 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது  700 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுவ தால் 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப் பட்டு 80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  வைகை அணையின் நீர்மட்டம்  70.18 அடியாக உள்ளது. நீர்வரத்து 1501 கன அடி.  1384 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

;