districts

img

பேருந்து வசதி கோரி போக்குவரத்து பணிமனையை கிராம மக்கள் முற்றுகை

மதுரை, அக்.13-  மதுரை மாவட்டம் உசி லம்பட்டி அருகே உள்ள ஒத்  தப்பாறைப்பட்டி கிராமத்  தில் கடந்த 50 ஆண்டுகளுக் கும் மேலாக தார்ச்சாலை இருந்தும் பேருந்து சேவை வழங்கப்படவில்லை என வும் இது சம்பந்தமாக ஊரா ட்சி நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை பலமுறை  மனு அளித்து எந்த நட வடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை எனவும் கிராம மக்  கள் வேதனையுடன் கூறினர். இந்நிலையில் வியாழ னன்று தங்கள் கிராமத் திற்கு பேருந்து வசதி  வேண்டும் என வலியுறுத்தி  உசிலம்பட்டி அரசு போக்கு வரத்து பணிமனையை முன்பு  முற்றுகையிட்டு கிராம மக் கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த உசி லம்பட்டி நகர் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி எம்.எல் பி. அய்யப்பன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் போக்கு  வரத்து பணிமனை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்  தினர். விரைவில் பேருந்து  சேவை துவங்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததை அடுத்து போரா ட்டம் கைவிடப்பட்டது.