districts

img

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

 தென்காசி,அக்.19- இன்றைய இளைஞர்கள் பழமையை மறக்காமல் நம் முன்னோர்களின் தியா கங்களை நினைவு கூருவதற்கும் அவர்களின் தியாகங்களை போற்றுவ தற்கும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை தென்காசி மாவட்டம் இ. சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாளாகத்தில் புதனன்று  மாவட்ட வருவாய் அலுவலர்  .இரா.ஜெய்னு லாப்தீன்,  கூடுதல் தலைமை இயக்குநர், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகம் மண்டலக இயக்குநர் ஜெ.காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து  திறந்து வைத்தனர். இந்த கண்காட்சி 19,20, 21 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகின்றது.  இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற  தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலை வர்.கே.என்.எல்.சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர் திருமதி வசந்தி, மற்றும் கள விளம்பர அலுவலர் மத்திய மக்கள் தொடர்பகம் . ஜூனி ஜேக்கப், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான,  ஓவியம், பேச்சுப்போட்டி கவிதை போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

;