districts

img

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

திருவில்லிபுத்தூர், அக்.21- திருவில்லிபுத்தூர் அருகே ரெங்க பாளையத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பில் சனிக்கிழமை அன்று அழ காபுரி பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்விற்கு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.சி.பாண்டியன் தலைமை வகித்  தார். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜுனன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், ஒன்றிய  செயலாளர் பெனரி, சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, செயலாளர் பி.என்.தேவா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்  டப் பொருளாளர் ஜோதிலட்சுமி, ஜெயக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து உயிரிழந்த வர்களின் குடும்பத்தாரின் வீடுகளுக்கு சிபிஎம், சிஐடியு தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.