மதுரை, டிச.10- தமிழக அரசு திடீரென்று மாணவர்க ளுக்கு பேருந்து பயணத்தில் விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் - நடத்துநர் தான் காரணம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அதிகப்படியான பேருந்துகளை தமிழக அரசு போக்கு வரத்து கழக நிர்வாகம் இயக்கிட வேண்டும். பேருந்துகளில் படிக்கட்டுக ளுக்கு கதவுகள் அமைக்க வேண்டும். பேருந் தில் பயணம் செய்யும் மாணவர்களை முறைப்படுத்தி ஏறிச் செல்வதற்கு உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளி யன்று மதிய நேர உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் மதுரை மண்டலத்தில் புற வழிச்சாலை அரசு போக்குவரத்து தலை மையகம், பொன்மேனி, எல்லீஸ்நகர் உள்ளிட்ட 16 பணிமனைகளில் நடை பெற்றது. புறவழிச்சாலை தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க துணை பொதுச்செயலாளர் எஸ்.செல்வாஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ.கனகசுந்தர் , துணைப் பொதுச்செயலாளர் டி.கே.முரளிதரன் ஆகியோர் பேசினர். புதூர் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கிளைத் தலைவர் ஆர்.முனியசாமி பேசினார். தலைவர் பி.எம்.அழகர்சாமி உரையாற்றி னார். துணைத் தலைவர் எஸ். அழகர்சாமி உள் ளிட்டு 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.